Day: November 21, 2022

புகையிரதம் மோதி அடையாளம் தெரியாத இளைஞன் பலிபுகையிரதம் மோதி அடையாளம் தெரியாத இளைஞன் பலி

அநுராதபுரத்துக்கும் ஷ்ரவஸ்திபுர புகையிரத நிலையத்துக்கும் இடையில் புகையிரதப் பாதையில் இன்று (21) இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் மற்றும் ஷ்ரவஸ்திபுர புகையிரத நிலையங்களுக்கு இடையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் விசேட புகையிரதமொன்று கொழும்பில் [...]

பெண் பொலிஸாரின் மகளை துஷ்பிரயோகம் செய்த கள்ளக்காதலன்பெண் பொலிஸாரின் மகளை துஷ்பிரயோகம் செய்த கள்ளக்காதலன்

மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் பொறுப்பதிகாரியான பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் 12 வயது மகள், அந்த அதிகாரியின் கள்ளக் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் [...]

QR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புQR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

QR முறை நீக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் [...]

எதிர்வரும் நான்கு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்எதிர்வரும் நான்கு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்

நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நாளை(22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுழற்சி [...]

நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்புநிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுகத்தினால் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.6 மெக்னிடியூட் அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை [...]

பாடசாலைக்கு சென்ற 14 வயது சிறுமி மாயம்பாடசாலைக்கு சென்ற 14 வயது சிறுமி மாயம்

பாடசாலைக்கு சென்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 20ஆம் திகதி பாடசாலை சென்ற 14 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்தோடு அச் சிறுமியின் ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயான சிறுமியினுடைய தந்தை [...]

இந்தோனேசியாவில் நில நடுக்கம் – 20 பேர் பலி, 300 பேர் காயம்இந்தோனேசியாவில் நில நடுக்கம் – 20 பேர் பலி, 300 பேர் காயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜகார்த்தா, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் [...]

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வுவெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

ஒரு கூடை வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாறாமல் இருந்த நிலையில், அதன் விற்பனை விலை ரூ. 371.83. ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டாலர்கள், யூரோ, பவுண்ட் [...]

போதைப்பொருள் வியாபாரி மீது பொலிசார் துப்பாக்கிச்சூடுபோதைப்பொருள் வியாபாரி மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

இன்று (21) மெட்டியகொட பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை பொலிசார் கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். [...]

திருக்கேதீச்சரத்தில் தொடர்ச்சியாக திருட்டு – கட்டி வைத்த பொதுமக்கள்திருக்கேதீச்சரத்தில் தொடர்ச்சியாக திருட்டு – கட்டி வைத்த பொதுமக்கள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அடம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (20) ஞாயிற்றுக்கிழமை மதியம் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த [...]

சபையில் மாவீரர்களை நினைவுகூர்ந்த சாணக்கியன்சபையில் மாவீரர்களை நினைவுகூர்ந்த சாணக்கியன்

மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த மாவீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவுகூருகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மாவீரர்களை நினைவுகூர்ந்தார். விக்ரமசிங்க-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு [...]

சிலருடன் இணைந்து மதுபானம் அருந்திய நபர் குத்திக்கொலைசிலருடன் இணைந்து மதுபானம் அருந்திய நபர் குத்திக்கொலை

நாகவில, ஆடிகம பிரதேசத்தில் வீடொன்றில் இரும்பு கம்பியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 36 வயதுடைய ஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உயிரிழந்தவர் தனது வீட்டில் மற்றுமொரு குழுவினருடன் மதுபானம் [...]

ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள்ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற தாய் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதென வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் [...]

வவுனியா பேருந்து நிலையத்தில் விபச்சாரம் செய்யும் பெண்கள்வவுனியா பேருந்து நிலையத்தில் விபச்சாரம் செய்யும் பெண்கள்

வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத விபச்சார கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு பொலிசார் தவறிவிட்டனர். அங்கு அமர்ந்து மது அருந்துதல் கலாச்சார சீரழிவுகளால் மக்கள் நடமாட முடியவில்லை. வர்த்தக நிலையங்களில் இளைஞர் யுவதிகள் பணியாற்ற முடியவில்லை [...]

வவுனியாவில் 16 வயது தங்கையை சீரழித்த அண்ணன்வவுனியாவில் 16 வயது தங்கையை சீரழித்த அண்ணன்

சகோதரியை வன்முறைக்கு உள்ளாக்கிய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் வவுனியா பட்டக்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 16 வயதுடைய தங்கையையே இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை [...]

இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்

நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகி வருவதாக சுகாதாரத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நேற்று (20) நாட்டில் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, [...]