சபையில் மாவீரர்களை நினைவுகூர்ந்த சாணக்கியன்
மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த மாவீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவுகூருகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மாவீரர்களை நினைவுகூர்ந்தார்.
விக்ரமசிங்க-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.