QR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
QR முறை நீக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
எரிபொருள் நெருக்கடியைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட QR முறையானது முழுமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வரையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.