வவுனியாவில் 16 வயது தங்கையை சீரழித்த அண்ணன்

சகோதரியை வன்முறைக்கு உள்ளாக்கிய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் வவுனியா பட்டக்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு 16 வயதுடைய தங்கையையே இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த தங்கையை சகோதரன் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளான்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26 வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Related Post

ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல் – இதுவரை 93 பேர் பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் சிலர் [...]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி
29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக [...]

பிரதமரின் இல்லத்தை எரித்தமைக்கு சுமந்திரன் கண்டனம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை எரித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் [...]