பாடசாலைக்கு சென்ற 14 வயது சிறுமி மாயம்
பாடசாலைக்கு சென்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 20ஆம் திகதி பாடசாலை சென்ற 14 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு அச் சிறுமியின் ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயான சிறுமியினுடைய தந்தை அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுமி வீட்டில் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும், தந்தையின் சட்டைப் பையில் இருந்து 3600 ரூபா பணத்தையும், சில ஆடைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் அவரது மூத்த பிள்ளை வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் முகநூலில் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் களனி பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் நட்பாக இருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.