Day: May 1, 2022

விபத்தில் இருவர் பலி – மோதிய வாகனத்திற்கு தீ வைத்த மக்கள்விபத்தில் இருவர் பலி – மோதிய வாகனத்திற்கு தீ வைத்த மக்கள்

குளியாப்பிட்டி கனதுல்ல மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (01) பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது சிறார் ஒருவர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற டிஃபென்டர் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் (தந்தை மற்றும் மகன்) 4 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளனர். [...]

பேரணியில் கலந்து கொண்ட நபர் திடீர் மரணம்பேரணியில் கலந்து கொண்ட நபர் திடீர் மரணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் தொம்பே பகுதியில் இருந்து பேரணியில் கலந்துகொள்ள வருகைத் தந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது [...]

கிளிநொச்சியில் அரசுக்கு எதிரான கோஷங்களுடன் “தமிழ்தேசிய மேநாள்” ஊர்வலம்கிளிநொச்சியில் அரசுக்கு எதிரான கோஷங்களுடன் “தமிழ்தேசிய மேநாள்” ஊர்வலம்

தமிழ்தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றிருக்கின்றது. பிற்பகல் 2.30 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியானது ஏ9 வீதி ஊடாக டிப்போ சந்திவரை சென்று அங்கு உள்ள பசுமை பூங்காவில் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றது. குறித்த பேரணி ஆரம்ப நிகழ்வில் [...]

காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இரு காவல்துறை உத்தியோகத்தர்களை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகல் 1 மணியளவில் சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய, அதே வீதியில் போக்குவரத்து கடமையில் [...]

நம்பிக்கையில்லா பிரேரணையில் 120 பேர் அரசாங்கத்திற்கு எதிராகநம்பிக்கையில்லா பிரேரணையில் 120 பேர் அரசாங்கத்திற்கு எதிராக

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் அளவில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் [...]

கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை – வெளியானது அறிவிப்புகொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை – வெளியானது அறிவிப்பு

பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் [...]

அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் பதிவு – கணவன், மனைவி மீது தாக்குதல்அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் பதிவு – கணவன், மனைவி மீது தாக்குதல்

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாகுதலில் காயங்களுக்குள்ளான தம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் கிரிந்திவெல – மாலிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியுமே பாதிக்கப்பட்டுள்ளனர். [...]

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் [...]

கோட்டா ஒழிக – தமிழீழம் எங்களிற்கு – இளைஞர்கள் கோஷம்கோட்டா ஒழிக – தமிழீழம் எங்களிற்கு – இளைஞர்கள் கோஷம்

தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் “கோட்டா ஒழிக” “தமிழீழம் எங்களிற்கு” என்ற கோசத்தை இளைஞர்கள் முன்வைத்திருந்தனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மே நாள் பேரணியில் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டு இருந்த நிலையில் கிளிநொச்சி இளைஞர்கள் இவ்வாறான கோசத்தை எழுப்பியிருந்தனர். இதுவரை [...]

பேருந்துடன் மோதிய ஆட்டோ – கணவன் – மனைவி உட்பட 3 பேர் பலிபேருந்துடன் மோதிய ஆட்டோ – கணவன் – மனைவி உட்பட 3 பேர் பலி

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மன்னம்பிட்டி பாலத்தின் அருகில் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முன்னால் பயணித்த பேருந்து ஒன்றை முந்திச் செல்வதற்கு [...]

யாழில் 10 வயது சிறுவன் துஸ்பிரயோம் – 32 வயது இளைஞன் கைதுயாழில் 10 வயது சிறுவன் துஸ்பிரயோம் – 32 வயது இளைஞன் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு – குடாரப்பு கிராமத்தில் 10 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் மீது சிறுவனின் தந்தை பொலிஸாரிடம் கொடுத்த [...]

2 மற்றும் 4ஆம் திகதி மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு2 மற்றும் 4ஆம் திகதி மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு

இன்றும் நாளை மறுதினமும், நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை மற்றும் [...]

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. இலங்கையிலும் அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரயில் நிலையத்திற்கு அருகில் பிற்பகல் நடைபெறும். ஸ்ரீ லங்கா [...]

மூங்கிலாறு மருத்துவமனை மீது தாக்குதல் – ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்மூங்கிலாறு மருத்துவமனை மீது தாக்குதல் – ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

கடந்த 29 ஆம் திகதி அன்று தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மூங்கிலாறு ஆதார வைத்தியசாலைக்கு சென்ற தந்தை ஒருவர் அனுமதிச்சீட்டை வழங்கப்பட்ட பின்னர் வைத்தியர் இரண்டு மணியின் பின்னரே நோயாளியை பார்வையிடுவார் என்று கூறியதற்கு [...]

இடியுடன் கூடிய மழைஇடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் [...]

ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கைஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை

ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி கும்பல், வாடிக்கையாளர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அனுப்புவது போன்று மின்னஞ்சல் ஒன்றை போலியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை உண்மை [...]