இன்று சர்வதேச தொழிலாளர் தினம்
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. இலங்கையிலும் அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரயில் நிலையத்திற்கு அருகில் பிற்பகல் நடைபெறும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டம் அதன் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறும்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் எதிர்ப்பு பாத யாத்திரை சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கும்.
மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் பி.ஆர்.சி. மைதானத்தில் நடைபெறும்.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் மே தினக் கூட்டம் விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெறவுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் நடைபெறும்.
லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை மக்கள் கட்சி என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் ஹைட்பார்க்கில் நடைபெறும்.