ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை

ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடி கும்பல், வாடிக்கையாளர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அனுப்புவது போன்று மின்னஞ்சல் ஒன்றை போலியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதனை உண்மை என நம்புவோர் அதில் வரும் லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் தமது வங்கி தகவல்களை மோசடிக்கையாளகளுக்கு வழங்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான மின்னஞ்சல்கள் வரும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வங்கிகள், தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை மோசடியாளர்கள் தகவல்களை பெற்று வங்கியில் உள்ள பணத்தை ஒன்லைன் மூலம் மாற்றிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. மேலும் இவ்வாறான மோசடி சம்பவங்கள் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தற்போது தீவிரம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதது.
Related Post

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் பலி
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் [...]

அம்பாறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய கோயில் ஐயர் கைது
சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 [...]

இலாபகரமான நிறுவனமாக மாறிய லங்கா சதொச
லங்கா சதொச நிறுவனம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நட்டத்தில் [...]