2 மற்றும் 4ஆம் திகதி மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு
இன்றும் நாளை மறுதினமும், நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதி ஆகிய தினங்களில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகும்.
இதேவேளை கொழும்பு நகர் பகுதிகளில் குறித்த தினங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.