அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் பதிவு – கணவன், மனைவி மீது தாக்குதல்

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தாகுதலில் காயங்களுக்குள்ளான தம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் கிரிந்திவெல – மாலிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில், ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டால் தமதுப் பிள்ளைக்கு மருந்து பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியவில்லை என்கிற ஆத்திரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் பதிவிடப்பட்ட பதிவொன்றுக்காகவே கணவனும், மனைவியும் தாக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவின் இளைய சகோதரரே இவ்வாறு தங்களை வீடு புகுந்து தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

இரு மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞன் பலி – மற்றுமொருவர் படுகாயம்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு [...]

சிட்னி விபத்தில் இலங்கை மாணவன் பரிதாப மரணம்
தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஓட்டிவந்த வாகனத்தில் மோதுண்ட இலங்கை இளைஞன் சம்பவ [...]

யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனை படைத்த புறா
யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்று சாதனையை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறீதர் என்பவரின் [...]