பேருந்துடன் மோதிய ஆட்டோ – கணவன் – மனைவி உட்பட 3 பேர் பலி

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மன்னம்பிட்டி பாலத்தின் அருகில் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முன்னால் பயணித்த பேருந்து ஒன்றை முந்திச் செல்வதற்கு முயற்சித்தபோது எதிரேவந்த மற்றொரு பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 70 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் அவரது 62 வயது மனைவியும் 72 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

பாடசாலையில் ஜீப் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி – 07 பேர் காயம்
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஏற்பட்ட [...]

மன்னாரில் பாடசாலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் [...]

ராஜபக்ச குடும்பம் ரகசிய திட்டம் – மக்களின் கண்காணிப்பில் விமான நிலையம்
கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் [...]