Day: July 9, 2022

அனைத்து மதுபானசாலைகளும் பூட்டுஅனைத்து மதுபானசாலைகளும் பூட்டு

இன்றைய தினம் மாலை 5 மணி தொடக்கம் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும். என மதுவரி திணைக்களம் அறிவித்திருக்கின்றது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாளை மதுபான விற்பனைக்காக வழமையாக திறக்கப்படும் நேரம் [...]

ஜனாதிபதி பதவியிலிருந்து விலக தயாரான கோட்டாபயஜனாதிபதி பதவியிலிருந்து விலக தயாரான கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தன்னிடம் அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து [...]

மட்டக்களப்பில் மாணவியின் சைக்கிள் கூடைக்குள் கடிதம் போட்ட 42 வயது நபர்மட்டக்களப்பில் மாணவியின் சைக்கிள் கூடைக்குள் கடிதம் போட்ட 42 வயது நபர்

க.பொ.த உயர்தர மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 42 வயதான “ஒரு தலை காதலன்“ இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (8) மாலை மட்டக்களப்பு, புறநகர் பகுதியில் இடம்பெற்றது. க.பொ.த உயர்தர மாணவர்களிற்கு பிரத்தியேகமாக கணித பாடம் [...]

அடுத்த ஜனாதிபதியாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனஅடுத்த ஜனாதிபதியாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். இன்று (09) மாலை சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற [...]

ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெருந்தொகை பணம் மீட்டெடுப்புஜனாதிபதி செயலகத்திலிருந்து பெருந்தொகை பணம் மீட்டெடுப்பு

ஜனாதிபதி இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ,ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கிருந்து சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

தீயில் எரியும் ரணிலின் வீடு – கடும் பதற்றத்தில் கொழும்புதீயில் எரியும் ரணிலின் வீடு – கடும் பதற்றத்தில் கொழும்பு

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை உடைத்து தீ வைத்து எரித்துள்ளனர். கொழும்பு 7இல் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு [...]

பிரதமர் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலைபிரதமர் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. [...]

நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய (வீடியோ)நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய (வீடியோ)

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்களில் சில முக்கிய நபர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல்களில் சிலர் பொதிகளுடன் அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டபாய ராயபக்ச தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை, [...]

பதவி விலகுகிறேன் – ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் அறிவிப்புபதவி விலகுகிறேன் – ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் அறிவிப்பு

பதவியை இராஜினாமா செய்து சர்வகட்சி ஆட்சிக்கு வழிவகுக்க தாம் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் ஊடாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மேலும் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் சீராகவுள்ளதாலும், உலக [...]

ஜனாதிபதி செயலகத்தையும் இழந்தார் கோட்டாபயஜனாதிபதி செயலகத்தையும் இழந்தார் கோட்டாபய

ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் உள்நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. [...]

பிரதமர் விடுத்துள்ள அவசர அழைப்புபிரதமர் விடுத்துள்ள அவசர அழைப்பு

தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். [...]

காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு – இருவர் கவலைக்கிடம்காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு – இருவர் கவலைக்கிடம்

கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இராணுவத்தினர், பொலிஸாருடனான மோதலில் சிக்கிஅவர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் [...]

ஐனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களில் பூரண கட்டுப்பாட்டுக்குள்ஐனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களில் பூரண கட்டுப்பாட்டுக்குள்

ஐனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் பிரதான வாயில் கதவை உடைத்து உள்நுழைந்த போராட்டக்காரர்கள். ஜனாதிபதி மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது. [...]

சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில்சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில்

எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சஜித் பிரேமதாஸ வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. [...]

பாடசாலைகளுக்கு ஒரு வார காலத்திற்கு விடுமுறைபாடசாலைகளுக்கு ஒரு வார காலத்திற்கு விடுமுறை

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை திங்கட்கிழமை (11) முதல் வௌ்ளிக்கிழமை (15) வரை அனைத்து அரச [...]

தீவிரமடையும் போராட்டம் – இதுவரையில் ஏழு பேர் வைத்தியசாலையில்தீவிரமடையும் போராட்டம் – இதுவரையில் ஏழு பேர் வைத்தியசாலையில்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரையில் ழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பொது மக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. [...]