அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு
இன்றைய தினம் மாலை 5 மணி தொடக்கம் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும். என மதுவரி திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளை மதுபான விற்பனைக்காக வழமையாக திறக்கப்படும் நேரம் வரையில் இந்த அறிவிப்பானது அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.