தீயில் எரியும் ரணிலின் வீடு – கடும் பதற்றத்தில் கொழும்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை உடைத்து தீ வைத்து எரித்துள்ளனர்.
கொழும்பு 7இல் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 7ல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.