ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெருந்தொகை பணம் மீட்டெடுப்பு
ஜனாதிபதி இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ,ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கிருந்து சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் ளெியாகியுள்ளன.