Day: May 9, 2022

ஊரடங்கு உத்தரவு 11 ஆம் திகதி வரை நீடிப்புஊரடங்கு உத்தரவு 11 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இன்று மாலை 7 மணி முதல் நாளை (10) காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் [...]

மஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரிய வீடும் தீக்கிரைமஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரிய வீடும் தீக்கிரை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான, குருணாகலில் உள்ள வீடொன்று பிரதேசவாசிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மெதமுலனவில் உள்ள, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரிய வீடும் தீ பரவியுள்ளதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளா. இதேவேளை, மெதமுலனவில் [...]

தவிசாளரின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – 9 பேர் காயம்தவிசாளரின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – 9 பேர் காயம்

ஹம்பாத்தோட்டை, வீரகெட்டிய பிரதேச சபை தவிசாளரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். [...]

அலரி மாளிகைக்கு முன்பாக மீண்டும் பதற்றம்அலரி மாளிகைக்கு முன்பாக மீண்டும் பதற்றம்

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், நுழைவாயிலுக்கு அருகில், தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்விடத்து்க்கு நீர்த்தாரை பிரயோக வாகனமும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாகனத்தில் மீது தாக்குதல் [...]

சனத் நிஷாந்த எம்.பியின் வீடு தீக்கிரைசனத் நிஷாந்த எம்.பியின் வீடு தீக்கிரை

புத்தளம் மாவட்ட நாடாளுளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டக்காரர்கள் அவரது அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளதுடன், உடைமைகளையும் சேதமாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் [...]

இதுவரை 140 பேர் வைத்தியசாலையில் அனுமதிஇதுவரை 140 பேர் வைத்தியசாலையில் அனுமதி

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் [...]

துப்பாக்கி சூட்டில் 27 வயது இளைஞன் பலி – 5 பேர் படுகாயம்துப்பாக்கி சூட்டில் 27 வயது இளைஞன் பலி – 5 பேர் படுகாயம்

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழநதுள்ளார். கல்எலிய, ஹாபிட்டிகம பகுதியை சேர்ந்த [...]

நகர சபை மேயர் வீட்டிற்கு தீ வைப்புநகர சபை மேயர் வீட்டிற்கு தீ வைப்பு

மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்ணான்டோவின் வீட்டிற்கு சிலர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ, வில்லோராவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது அப்பகுதியில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

போராட்ட களத்தில் மகிந்தவின் ஆதரவு எம்.பி திடீர் மரணம்போராட்ட களத்தில் மகிந்தவின் ஆதரவு எம்.பி திடீர் மரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நிட்டம்புவவில் அவரது காரைத் தடுத்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் [...]

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமாஅமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியை அடுத்து அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. [...]

பதவி விலகினார் மஹிந்த ராஜபக்க்ஷபதவி விலகினார் மஹிந்த ராஜபக்க்ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட உரை… அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) [...]

மஹிந்த ஆதரவு காடையர்களுக்கு வீதி வீதியாக கதறவிட்டு, கும்பிட கும்பிட அடிமஹிந்த ஆதரவு காடையர்களுக்கு வீதி வீதியாக கதறவிட்டு, கும்பிட கும்பிட அடி

இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவாக நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அலரிமாளிகை முன்பாகவும், காலிமுகத்திடலிலும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பிரதமருக்கு ஆதரவான காடையர்களை பொதுமக்கள் அடித்து துவைத்து அனுப்பியுள்ளனர். கொழும்பு திம்பிரிகஸ்யாய பகுதிக்கு [...]

காலிமுகத்திடலில் இராணுவத்தினர் குவிப்பு – சவேந்திர சில்வாவும் விஜயம்காலிமுகத்திடலில் இராணுவத்தினர் குவிப்பு – சவேந்திர சில்வாவும் விஜயம்

காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் விஜயம் மேற்கொண்டுள்ளனர். [...]

கலவரம் காரணமாக இதுவரை – 23 பேர் காயம்கலவரம் காரணமாக இதுவரை – 23 பேர் காயம்

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது [...]

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். [...]

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் [...]