இதுவரை 140 பேர் வைத்தியசாலையில் அனுமதி
காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.