அலரி மாளிகைக்கு முன்பாக மீண்டும் பதற்றம்
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், நுழைவாயிலுக்கு அருகில், தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்விடத்து்க்கு நீர்த்தாரை பிரயோக வாகனமும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாகனத்தில் மீது தாக்குதல் நடத்துவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.