முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயம்
முல்லைத்தீவு – செம்மலை கல்லடி கடலில் குளிக்க சென்றிருந்த 10 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
இந்நிலையில் காணாமல்போனவர்களை தேடும் பணிகள் கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரும் கடற்கரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அளம்பில் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் மூவரே இவ்வாறு கடலில் மூழ்கியுள்ளனர்.
நண்பர்களோடு நீராடச்சென்ற நிலையிலேயே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.