யாழ். இந்து மகளிர் கல்லூரி முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் வழங்ககோரி பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை யாழ்.இந்து மகளிர் கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களே இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தாம் யாழ்ப்பாணத்தின் தூர இடங்களில் இருந்து வந்து யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில்,
தமக்கான எரிபொருள் கிடைக்காமையால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஆகவே பொறுப்பு வாய்ந்தவர்கள் தமக்கான எரிபொருளை பெற்றுத் தருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Related Post

உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கைச் சிறுவன்
சர்வதேச சாதனை புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கைச் சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் [...]

கொட்டுகொட பகுதியில் துப்பாக்கி சுட்டு – ஒருவர் பலி
சீதுவ, கொட்டுகொட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் [...]

அமைச்சு பதவியில் இருந்து மஹிந்த அமரவீர இராஜினாமா
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மஹிந்த [...]