மஹிந்தவின் தந்தையின் சிலை உடைப்பு
தங்காலை வீரகெட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி,ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி போராட்டக்காரர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நிலையை அடுத்து அரசாங்கத்தை விலகுமாறு கோரி, மக்கள் அமைதியான முறையில் தொடர்ட் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் போராட்டத்தில் ஈருபட்டவர்கள் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இலங்கை மயானபூமியானது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்களின் இடையே, அம்பாந்தோட்டை தங்காலை வீரகெட்டியவில் அமைக்கப்பட்டிருந்த டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி மீதே இவ்வாறு போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டள்ளது.
அதேவேளை இந்த தூபியை அமைக்க பொது மக்களின் பணம் விரயம் செய்யப்ப்ட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.