வட்டரக்க சிறைச்சாலையை சேர்ந்த 58 கைதிகள் மாயம்
வட்டரெக்க சிறைச்சாலையை சேர்ந்த 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இவர்கள் கொழும்புபில் பணி புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு வழமையாக திரும்பி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் 181 கைதிகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த நடைமுறை இடம்பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இவ்வாறு பணிக்கு சென்ற கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர்கள் மாலபே மற்றும் தலாஹேன பிரதேசங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.