துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு
பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் மேல் மாகாணத்தில் 6 பேரும் தென் மாகாணத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
68 வீடுகள் மற்றும் 47 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வீடுகள் மற்றும் 41 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.