சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் – வாகனமும் நொருக்கப்பட்டது
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு போர வாவிக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதுடன், அவரின் வாகனமும் சேதமாக்கப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தில் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
மேலும் குறித்த பொலிஸ் அதிகாரி நேற்றய தினம் காலி முகத்திடலில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுடன்,
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஸாந்தவுடன் உரையாடியபடி நடந்துவரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.