நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எவருடனும் இணைந்து செயற்படத் தயார்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக திருட்டு, மோசடி செய்யாத எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார்.
நல்ல நிகழ்ச்சிகளை முன்வைத்துள்ளோம். அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நல்லவர்கள், குறிப்பாக இளைஞர்களுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறினார் .
தெல்துவ கனேவத்த புராதன விகாரையில் இடம்பெற்ற யாத்திரையில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .