சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு
2 மாத காலத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதனை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்பகுழு மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் கொள்வனவின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்த இலங்கை கனிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தது.
இதன்காரணமாக நாளாந்தம் இடம்பெற்ற டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, டீசல் தாங்கிய மற்றுமொரு கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.
இன்னும் டீசல் தாங்கிய இரண்டு கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளன.