மட்டகளப்பில் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறை சேர்ந்த ஜெ.டனீஸ்டன் என்னும் 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக சாரதிகளை அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.