யாழில் கொடூர வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – நல்லூர் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருமையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (04-05-2022) இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.
கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.