நச்சு புகையை சுவாசித்ததால் 10 ஊழியர்கள் மருத்துவமனையில்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் துப்புரவுப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் நச்சுப் புகையை சுவாசித்த நிலையில் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (14) காலை சில ஊழியர்கள் வைத்தியசாலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் வாயு கசிவு ஏற்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
துப்புரவுத் துறையைச் சேர்ந்த 10 ஊழியர்கள் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.