பேராபத்தில் சீனா – 35 நாட்களில் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு
சீனாவில் மீன்ண்டும் வேகமெடுத்த கொரோனாவால் 35 நாட்களில் 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் தொடக்கத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதிலிருந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட முதல் பெரிய உயிரிழப்பு இது எண்ணிக்கை ஆகும்.
டிசம்பர் 8, 2022 முதல் இந்த ஆண்டு ஜனவரி 12 வரை சீனாவில் 59,938 கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக்க தேசிய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை மருத்துவ வசதிகளில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளை மட்டுமே குறிக்கிறதாகவும் , மொத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
டிசம்பர் தொடக்கத்தில் கோவிட் கொள்கையை கைவிட்டதிலிருந்து வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கையை சீனா குறைத்து மதிப்பிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனா முன்பு கோவிட் இறப்புகளாக வைரஸால் ஏற்படும் சுவாசக் கோளாறால் இறப்பவர்களை மட்டுமே கணக்கிடும் என்று கூறியதை உலக சுகாதார அமைப்பு விமர்சித்திருந்தது
அதேவேளை சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.