Day: December 15, 2022

சொகுசு கார் மரத்துடன் மோதி விபத்து – பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம்சொகுசு கார் மரத்துடன் மோதி விபத்து – பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம்

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுபளை பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது இச்சம்பவம் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது [...]

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் ஆபத்துதான்ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் ஆபத்துதான்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது பலருக்கும் தெரிந்த விடயமாக உள்ளது. ஆனால் சர்க்கரை அளவு குறைவது என்பது கூட ஆபத்தான ஒரு நிலைதான் என்பதை பற்றி பலரும் மறந்துவிடுகிறோம். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு குறையும் [...]

கால்பந்து வீரருக்கு மரண தண்டனைகால்பந்து வீரருக்கு மரண தண்டனை

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை [...]

இரு மாதங்கள் இருளில் மூழ்கப்போகும் இலங்கைஇரு மாதங்கள் இருளில் மூழ்கப்போகும் இலங்கை

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கை இருளில் மூழ்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், மின் உற்பத்தி செய்யப்படும் [...]

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்புகைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பாலம் ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றது. இரத்தினபுரி – இங்கிரிய பகுதயில் உள்ள நம்பபான கடகரெல்ல பாலத்திற்கு அருகிலிருந்து இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் 40 [...]

ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி – மைத்திரியின் அறிவிப்புஏனையக் கட்சிகளுடன் கூட்டணி – மைத்திரியின் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாளில் எம்மோடு யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் எனவும் மைத்திரி மேலும் [...]

கொவிட் நிலமை குறித்த உலக சுகாதார அமைப்பின் தீர்மானம்கொவிட் நிலமை குறித்த உலக சுகாதார அமைப்பின் தீர்மானம்

கொவிட் -19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் 2020 ஆம் ஆண்டில் பொது [...]

வவுனியாவில் துப்பாக்கியுடன் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது இளைஞன்வவுனியாவில் துப்பாக்கியுடன் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது இளைஞன்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 25 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், அவருக்கு அருகிலிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா – குடகச்சிக்கொடியில் இடம்பெற்றுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடாகச்சிக்கொடிய மானேரிகுளம் [...]

கடத்தப்பட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்கடத்தப்பட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

கண்டி வைத்தியசாலைக்கு அருகாமையில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஹந்தானை பகுதியிலுள்ள பாழடைந்த இடமொன்றில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திறமையான குத்துச்சண்டை வீரர் என்ற விருதை பெற்ற இந்த [...]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள வாய்ப்புவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள வாய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 15 காலை 10.00 மணி முதல் ‘சூம்’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஜசூம் இணைப்பின் மூலம் [...]

யாழ் அல்வாயில் இரு கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு – அம்புலன்ஸ் மீதும் தாக்குதல்யாழ் அல்வாயில் இரு கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு – அம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

யாழ்.பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிர்காப்பு பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் [...]

15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல்15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல்

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தாங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை பொது [...]

இன்று பலத்த காற்றும் வீசக்கூடும்இன்று பலத்த காற்றும் வீசக்கூடும்

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. [...]