ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி – மைத்திரியின் அறிவிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நாளில் எம்மோடு யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் எனவும் மைத்திரி மேலும் தெரிவித்தார்.
அநுராதபுரத்தின் ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளை மேற்கொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.