கடத்தப்பட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

கண்டி வைத்தியசாலைக்கு அருகாமையில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஹந்தானை பகுதியிலுள்ள பாழடைந்த இடமொன்றில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திறமையான குத்துச்சண்டை வீரர் என்ற விருதை பெற்ற இந்த இளைஞனை, கண்டி- வைத்தியசாலை லேனில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிலரால் ஓட்டோவொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

கடற்கரையில் சிசுவின் சடலம் – கவலைக்கிடமான நிலையில் பெண் ஒருவரும் மிட்பு
முத்துபந்திய கடற்கரையில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (24) [...]

முல்லைத்தீவில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரின் திருவிளையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட வீடு ஒன்றில் அதிகளவான எரிபொருளை பதுக்கி [...]

கேகாலையில் பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு அசிட் வீச்சு
கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை [...]