கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பாலம் ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றது.
இரத்தினபுரி – இங்கிரிய பகுதயில் உள்ள நம்பபான கடகரெல்ல பாலத்திற்கு அருகிலிருந்து இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த நபர் வேறோர் இடத்தில் கொலைசெய்யப்பட்டு, அவரது சடலம் இன்று அதிகாலை குறித்த காட்டுப் பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம்.
என பொலிஸார் மேலும் சந்தேகம் தொிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.