Day: July 2, 2022

எரிபொருள் வரிசையில் நின்ற பெண் கள்ள காதலனுடன் ஓட்டம்எரிபொருள் வரிசையில் நின்ற பெண் கள்ள காதலனுடன் ஓட்டம்

எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற 52 வயது பெண்ணொருவர், எரிபொருள் பெறுவதை கைவிட்டு, காதலுடன் ஓடிய சம்பவம் ஒன்று பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான குறித்த பெண் , மூன்று பிள்ளைகளையும் கணவனையும் கைவிட்டு, திருமணமான [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறித்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து [...]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம்

இலங்கை முழுவதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் கூட்டத்தின் போதே இந்த [...]

மின்சார பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கைமின்சார பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக மின்சார [...]

எரிபொருள் நிலையத்தில் விமானப்படை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல்எரிபொருள் நிலையத்தில் விமானப்படை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல்

விமானப்படை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொரட்டுவை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்களை வெளியேற்றச் சென்ற போது விமானப்படை அதிகாரிகளுக்கும் [...]

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டை – தடுக்க சென்ற இளைஞன் பலிதந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டை – தடுக்க சென்ற இளைஞன் பலி

நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க சென்ற போதே குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் மெதகம [...]

எரிபொருள் நெருக்கடி – விடைத்தாள் திருத்தும் பணி இடைநிறுத்தம்எரிபொருள் நெருக்கடி – விடைத்தாள் திருத்தும் பணி இடைநிறுத்தம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள 94 ஐஓசி பெற்றோல் [...]

விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் – அப்பளமாக நொறுங்கிய கார்விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் – அப்பளமாக நொறுங்கிய கார்

கேஜிஎப் படத்தின் நடிகரான பி.எஸ்.அவினாஷ் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான, கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 படங்களில் ஆண்ட்ரூ என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். [...]

கொழும்பில் மர்ம கும்பல் – பொலிஸாரை கொலை செய்ய திட்டம்கொழும்பில் மர்ம கும்பல் – பொலிஸாரை கொலை செய்ய திட்டம்

போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக அடக்கு முறைகளில் நேரடியாக ஈடுபட்டு ஓய்வுபெற்ற பல பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ய பாதாள உலகக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் [...]

படிக்கட்டில் தவறி விழுந்த யாழ் கரவெட்டியை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் மரணம்படிக்கட்டில் தவறி விழுந்த யாழ் கரவெட்டியை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் மரணம்

படிக்கட்டில் தடுக்கி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்.கரவெட்டியை சேர்ந்த அனுரா அனுஷாந் (வயது34) என்ற இளம் குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நிலையில், [...]

எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்புஎரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூலை 13 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் மற்றும் 29 முதல் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் [...]

இரண்டு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் எழுதிய கடிதம்இரண்டு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் எழுதிய கடிதம்

நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது. குறித்த பெண் சில காலமாக [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் [...]

யாழில் பெற்றோல் 3000-4000 ரூபா வரை விற்பனையாழில் பெற்றோல் 3000-4000 ரூபா வரை விற்பனை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே [...]

இன்றைய மின்வெட்டு அட்டவணைஇன்றைய மின்வெட்டு அட்டவணை

இலங்கையில் இன்றையதினம் (02-07-2022) மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது இதன்படி இன்று சனிக்கிழமை 2 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான விபர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. [...]

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்புஇலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று [...]