யாழில் பெற்றோல் 3000-4000 ரூபா வரை விற்பனை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால் வெறிச்சோடி காணப்படுகின்றது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே டோக்கன் அடிப்படையில் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் யாழில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மத்தியில் சில கறுப்பு சந்தைகளில் பெற்றோலின் விலை 3000-4000ரூபா வரை விற்பனையாகி வருகின்றதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.