இரண்டு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் எழுதிய கடிதம்


நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது.

குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், மருந்தை உட்கொள்வதற்கு உடலுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான தாய் தனது 5 வயது மற்றும் 11 வயது குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் நேற்று குதித்திருந்தார்.

சம்பவத்தில் 5 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது குழந்தை உயிர் பிழைத்துள்ளது.

உயிரிழந்த பெண்ணிடம் இருந்து 2000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சுரங்கிகா மதுமாலி என்ற 32 வயதுடைய தாய் நேற்று (01) பிற்பகல் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்துள்ள நிலையில் 11 வயதுடைய சாம் துஷ்மந்த நீந்திக் கரைக்கு வந்து உதவி கோரி சத்தமிட்டுள்ளார்.

அதன்படி பிரதேசவாசிகள் மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாயை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

தாய் மற்றும் 5 வயதுடைய நெதும் நெத்மால் ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் 5 வயது குழந்தை மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தாய் நேற்று மாலை உயிரிழந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *