எரிபொருள் வரிசையில் நின்ற பெண் கள்ள காதலனுடன் ஓட்டம்
எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற 52 வயது பெண்ணொருவர், எரிபொருள் பெறுவதை கைவிட்டு, காதலுடன் ஓடிய சம்பவம் ஒன்று பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான குறித்த பெண் , மூன்று பிள்ளைகளையும் கணவனையும் கைவிட்டு, திருமணமான நபர் ஒருவருடன் சென்றுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கள்ளக்காதலுடன் சென்ற பெண் வீட்டில் இருந்து 2 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை எடுத்துச் சென்றுள்ள அதேவேளை அவருடன் சென்ற கள்ளக் காதலன் அவர் பொறுப்பில் இருந்த பசுக்கள் அனைத்தையும் 22 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவரது குடும்பத்தினரும் பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.