Day: June 3, 2022

அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு ஒரு நேர உணவுக்காக வழங்கப்படும் இறைச்சி, மீன் மற்றும் முட்டை என்பன தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வைத்தியசாலைகளில் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு தேசிய [...]

யாழ் வட்டுக்கோட்டையில் மாணவியை கடத்த முற்பட்ட குழு – மடக்கிப் பிடித்த பொதுமக்கள்யாழ் வட்டுக்கோட்டையில் மாணவியை கடத்த முற்பட்ட குழு – மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

யாழ்.வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப் பிடித்து கயெஸ் வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டையில் பஸ்சில் வந்து இறங்கிய மாணவியை கூட்டிச் [...]

மட்டக்களப்பில் காணாமல் போன 15 வயது சிறுமி மீட்பு – 42 வயது நபர் கைதுமட்டக்களப்பில் காணாமல் போன 15 வயது சிறுமி மீட்பு – 42 வயது நபர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை இன்று (03) கொக்கட்டிச்சோலையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். [...]

நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாதுநாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

நாளைய(04) தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது. எவ்வாறாயினும், 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார [...]

வீட்டில் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைதுவீட்டில் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (02) காலை மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, 1,700 [...]

யாழ் நகர் பகுதியில் விடுதிகளில் சமூக சீர்கேடு – சிக்கிய இளைஞர், யுவதிகள்யாழ் நகர் பகுதியில் விடுதிகளில் சமூக சீர்கேடு – சிக்கிய இளைஞர், யுவதிகள்

யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக இன்றைய தினம் யாழ் மாநகர சபை அதிகாரிகளினால் திடீர் ப‌ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் [...]

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்புஇன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கு [...]

விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் பலிவிறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் பலி

பொகவந்தலாவ மவெலி வனப்பகுதிக்கு தனது தந்தையுடன் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் மரத்திலிருந்து வழுக்கி விழுந்ததில் உயிர் இழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (02) மாலையில் இடம்பெற்றதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, [...]

யாழில் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 17 வயது சிறுவன் மரணம், 15 வயது சிறுவன் படுகாயம்யாழில் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 17 வயது சிறுவன் மரணம், 15 வயது சிறுவன் படுகாயம்

யாழ்.பருத்தித்துறை – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதான சிறுவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று குஞ்சர்கடைப் பகுதியில் காலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த [...]

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் அதிகரிப்புஇன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் அதிகரிப்பு

புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாகவே இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]

வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து குழந்தை பலிவவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து குழந்தை பலி

வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயதுக் குழந்தை மரணமடைந்துள்ளது. இன்று (03) காலை குறித்த குழந்தை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் ஏனைய சிறுவர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தது. எனினும் சற்று நேரத்தில் குழந்தையின் குரல் கேட்காத [...]

வவுனியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் முரண்பாடுவவுனியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் முரண்பாடு

வவுனியாவில் இரு எரிவாயு விற்பனை நிலையங்களில் வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாவனையாளர் அதிகார சபையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர். வவுனியா மாவட்டத்தில் இன்று (03) 5 எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என [...]

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலிமோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பாணந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை நிர்மல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது [...]

15 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் கைது15 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் கைது

திரப்பனை பிரதேசத்தில் ஆசிரியர் ஓய்வு அறையில் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த சிறுமி தனது தாயுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கமைய, [...]

கனடாவில் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்றுகனடாவில் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா முழுவதும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான மாக்டலன் என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த [...]

யாழில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற 15 வயது சிறுமியை காணவில்லையாழில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற 15 வயது சிறுமியை காணவில்லை

யாழ்.வேலணை – சரவணை பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற 15 வயது சிறுமி காணாமல்போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்களே ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காணாமல் [...]