நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது
நாளைய(04) தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது.
எவ்வாறாயினும், 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் மீளவும் முன்னெடுக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 3 நாட்களாக நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.