கனடாவில் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா முழுவதும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான மாக்டலன் என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரை ஒதுங்கியுள்ளது.
அதற்குக் காரணம் H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று.
இந்த H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று, ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பறவைகள் மூலம் வட அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக ஒரு வைரஸ் ஓரிடத்தில் நுழையும் போது, அங்கிருக்கும் கால்நடைகளுக்கு அந்த வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே, அந்த வைரஸ் மிக பயங்கரமாக பரவும் என்றார்.