அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்
அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு ஒரு நேர உணவுக்காக வழங்கப்படும் இறைச்சி, மீன் மற்றும் முட்டை என்பன தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வைத்தியசாலைகளில் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவிலை போதனா வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா உள்ளிட்ட வைத்தியசாலைகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு ரிச்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு காலை நேரம் வழங்கப்படும் பால்தேநீரும் நிறுத்தப்பட்டுள்ளது.