15 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் கைது
திரப்பனை பிரதேசத்தில் ஆசிரியர் ஓய்வு அறையில் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
குறித்த சிறுமி தனது தாயுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை நிறைவடைந்த பின்னர் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.