கொழும்பு வரும் அனைத்து புகையிரதங்களும் இடைநிறுத்தம்
மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களையும் இடைநிறுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும் கொழும்பில் இருந்து பயணிக்கும் புகையிரத சேவைகள் இன்று மாலை வரையில் வழமை போன்று செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.