மண்ணெண்ணெய் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை
மண்ணெண்ணெய் விநியோகத்தையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதேசமயம் உடன் அமுலாகும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது