Day: July 14, 2022

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகாஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் ஜனாதிபதி பதவியை ஏற்க தயார். என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு [...]

விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகைவிசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகை

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை பொறுப்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி, ஜனாதிபதி மாளிகை இன்று [...]

ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்த ஜனாதிபதிராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ராஜினாமா கடிதத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் ஆராயப்படுவதாக சபாநாயகர் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி [...]

முக்கிய இடங்களை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள்முக்கிய இடங்களை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள்

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதென அமைதி வழி போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர் [...]

கொழும்பு வரும் அனைத்து புகையிரதங்களும் இடைநிறுத்தம்கொழும்பு வரும் அனைத்து புகையிரதங்களும் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களையும் இடைநிறுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் கொழும்பில் இருந்து பயணிக்கும் புகையிரத சேவைகள் இன்று மாலை வரையில் வழமை போன்று செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. [...]

யாழில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்புயாழில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்.கந்தர்மடம் பகுதியில் புகைரத கடவைக்குள் நுழைந்த நபர் மீது புகைரதம் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலதிக விபரம் இணைக்கப்படும்.. [...]

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் [...]

மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட கோட்டபாயமாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட கோட்டபாய

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சவுதி எயர்லைன்ஸின் sv788 விமானம் மூலம் புறப்பட்டதாக தெரியவருகின்றது. [...]

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவுஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிவரை [...]

கோட்டாபய இராஜினாமா செய்யாவிடின் அதிரடி நடவடிக்கை – சபாநாயகர்கோட்டாபய இராஜினாமா செய்யாவிடின் அதிரடி நடவடிக்கை – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியை விட்டுச் சென்றதாகக் கருதி மேற்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் [...]

போராட்டக்காரர் போர்வையில் நாசவேலை செய்யும் காடையர் கூட்டம்போராட்டக்காரர் போர்வையில் நாசவேலை செய்யும் காடையர் கூட்டம்

மக்கள் போராட்டத்தை திசைதிருப்ப நாடாளுமன்ற பகுதியில் போராட்டக்காரர் போர்வையில் களமிறக்கப்பட்டுள்ள வேறோரு குழு அட்டகாசம் என்று காலிமுகத்திடல் போராட்டக் குழு அறிவித்துள்ளது. எனவே நாடாளுமன்றப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று காலிமுகத்திடல் வரும் படி உணர்வுள்ள மக்களுக்கு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கோரிக்கை [...]

சர்வதேச பிடியாணை மூலம் கோட்டாபயவை கைது செய்வதற்கு திட்டம்சர்வதேச பிடியாணை மூலம் கோட்டாபயவை கைது செய்வதற்கு திட்டம்

சர்வதேச பிடியாணை பிறப்பித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா பாராளுமன்றத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய(புதன்கிழமை) லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. [...]

கோட்டாபய தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கோட்டாபய தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர். சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த போதிலும், [...]

தனியாக வசித்த திருமணமாகாத 42 வயது பெண் குத்திக்கொலைதனியாக வசித்த திருமணமாகாத 42 வயது பெண் குத்திக்கொலை

தெல்கொட, கந்துபோட பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 42 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர், கடந்த 12ஆம் திகதி இரவு தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது, ​​கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக, மெகவத்தை பொலிஸார் தெரிவித்தனர். கந்துபொட பிரதேசத்தில் உயிரிழந்தவர் நிர்மாணித்த [...]

நாடாளுமன்ற சுற்றாடலில் நேற்றிரவு நடந்த மோதல்களில் 84 பேர் படுகாயம்நாடாளுமன்ற சுற்றாடலில் நேற்றிரவு நடந்த மோதல்களில் 84 பேர் படுகாயம்

நாடாளுமன்ற சூழல் மற்றும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றில் இடம்பெற்ற மோதல்களில் 84 பேர் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.காயமடைந்தவர்களுள் இராணுவ சிப்பாயொருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் [...]

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இராணுவ வீரர் ஒருவரிடம் [...]