பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்
பதுளை நகரில் உள்ள பிரபல பாடசாலைகளின் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவரும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதல் உறவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த போது பதுளை பொலிஸ் வளாகத்திற்கு அருகில் உள்ள வெலேக்கடை என்ற இடத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலினால் தர்மதூத வித்தியாலய மாணவனின் வலது காதின் கீழ் பகுதியில் பலத்த கீறல்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆரம்ப சிகிச்சையின் பின்னர் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் மாணவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.