யாழில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம் 30 வயது இளைஞன் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சிறுமியின் தாயாரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று முன்தினம் சந்தேகத்தின் அடிப்படையில் 30 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் குறித்த சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.