கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்
பெற்றோலிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தின் மீது தியத்த உயனவிற்கு அருகில் வைத்து கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்கள் முதல் பொலிஸ் வீதித்தடையை உடைத்துக்கொண்டு முன்னேறியதன் காரணமாக இவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொல்துவ சந்தி மற்றும் ஜப்பானிய நட்புறவு பாலத்திற்கு அருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.