முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று (06) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 5 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் வாக்குமூலங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழ் யுவதி கொழும்பில் கொலை? – காதலனின் வாக்குமூலம்
கல்கிஸ்ஸையில் உள்ள விடுதியொன்றின் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து தமிழ் யுவதியொருவர் [...]

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – ஜனாதிபதி முன்னிலையில் சம்மந்தன் காரசாரம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தொியும். ஆனால் என்ன நடந்தது என்பதை [...]

நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தம்புத்தேகம லுனுவெவயில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். [...]